பைக் ஓட்ட குடுத்தது குத்தமா? காரைக்குடி ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனம் கொடுத்த வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை
காரைக்குடி ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனம் கொடுத்த வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த காசிம் என்பவருக்கு சொந்தமான KTM Duke Bike கை தனக்குத் தெரிந்த ஒரு 18 வயது பூர்த்தி அடையாத சிறார் ஒருவருக்கு வண்டியை ஓட்ட கொடுத்த நிலையில், போலீசார் அந்த வண்டியை பறிமுதல் செய்தனர்

இது சம்பந்தமாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அந்த வண்டியின் உரிமையாளர் காசிம் அவர்களுக்கு 26,000 ரூபாய் அபராதமும் அவரின் வண்டியின் RC பதிவை ஓராண்டிற்கு ரத்து செய்துள்ளனர். இந்நிலையில் அபராத தொகையை காசிம் அவர்கள் செலுத்திய நிலையில் . RC ரத்து தொடரும் என்று காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments