அறந்தாங்கி அருகே வெட்டிவயலில் தவ்ஹீத் ஜமாஅத் தெருமுனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெட்டிவயல் கிளை சார்பாக  வரதட்சணை ஒழிப்பு மற்றும்  தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் செயலாளர் தலைமை வகித்தார். கிளைத் தலைவர்,  செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புரையாக  பேச்சாளர்கள் நெல்லை முஹைதீன் மற்றும் மாவட்ட செயலாளர் முகம்மது மீரான் ஆகியோர் உரையாற்றினார்கள். இதில் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும், வரும் நாடாளுமன்ற தே்தலில் வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும், இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், இஸ்ரேலின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments