ஒன்றுபட்டு போராடி மோட்டார் தொழிலாளர் மீதான தாக்குதலை முறியடிப்போம்!!




ஒன்றிய பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நடைமுறையில் இருந்த பல்வேறு சட்டங்களைத் திருத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் சட்டத்திற்கு எதிராகத்தான் ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டனர். அதேபோல், தொழிலாளர்களின் போராட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 44 தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றி தொழிலாளர் உரிமைகளை பறித்தது. இதற்கு எதிராக தொழிலாளர்கள் நாடு முழுவதும் போராடுகின்றனர்.

அதேபோன்று, 2014ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுத்தது. அனைத்து மோட்டார் தொழிலாளர்கள், தொழில் முனைவோர் அனைவரையும் இணைத்து அகில இந்திய சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் இதற்கு எதிராகப் போராடியது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி அராஜகமாக இச்சட்டத்தை நிறைவேற்றியது.

தொடரும் மோட்டார் வாகன சட்டத்திருத்த பாதிப்புகள்

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை எதிர்த்தபோது நாம் எச்சரித்த பாதிப்புக்கள் இப்போது அரங்கேற துவங்கிவிட்டது. அதீதமான தண்டனைகள், ஆன்லைன் அபராதம், வாகன வரி உயர்வு, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு என கொடுக்கப்பட்ட நெருக்கடியால் தொழிலையே விட்டு பலர் துரத்தப்பட்டனர். மோட்டார் தொழிலில் உள்ளவர்கள் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

புதிய ஆபத்து

மோட்டார் தொழிலையும், தொழிலாளர்களையும் கடும் துயரங்களுக்கு உள்ளாக்கி வரும் மோடி அரசு இப்போது மேலும் ஒரு தாக்குதலை தொடுத்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் (IPC) என்பதற்கு பதில், பாரதிய நியாய சங்கீதா (BNS) என்ற புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304A என்பது கவனக்குறைவு காரணமாக மரணம் ஏற்படும் விபத்தாகும். எனவே, வாகனங்கள் விபத்தானால் ஓட்டுனர்கள் மீது 304A சட்டப்படி அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். புதிய சட்டத்தில் 304A-க்கு பதிலாக 106(1), 106 (2) என புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. 106(1)ன் படி மரண விபத்து ஏற்படுத்தினால் தற்போதுள்ள இரண்டு ஆண்டு சிறை தண்டனை என்பது 5 ஆண்டு தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பதை பற்றி எவ்வித சிந்தனையும் செய்யாமல், விபத்தை பார்த்தவுடன் பல இடங்களில் ஓட்டுனர்கள் தாக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து ஏற்பட்டவுடன் தங்களை பாதுகாக்க ஓட்டுனர்கள் விபத்தான இடத்தை விட்டு செல்லும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு விபத்து நடந்த இடத்திலிருந்து சென்றுவிட்டால் அதற்கு 10 ஆண்டுதண்டனை, 7 லட்சம் அபராதம் என பிரிவு 106 (2) கூறுகிறது.

விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பதுதான். விபத்து ஏற்படும் முதல் வினாடி வரை இப்படி விபத்து ஏற்படும் என்பது வாகன ஓட்டிக்கே தெரியாது. அவ்வாறு எதிர்பாராமல் நடக்கும் விபத்திற்கு 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என சிறை தண்டனை விதித்து ஓட்டுனர்களை கிரிமினல் குற்றவாளிகளாக மாற்றும் அநீதி நடைபெற்றுள்ளது. இதற்கு எதிராகத்தான் இந்தியாவில் வடமாநிலங்களில் ஓட்டுனர்களின் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பயந்து தற்காலிகமாக நிறுத்துவதாக ஏமாற்றி மோடி அரசு போராட்டத்தை நிறுத்தியது. ஆனால், சட்டம் வாபஸ் பெறப்படவில்லை. எனவே, இச்சட்டத்திற்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டும். பொது வாகன ஓட்டுனர்கள் மட்டுமின்றி, சொந்த வாகனம் வைத்திருப்போர், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் உட்பட அனைவரும் இச்சட்டப்படி தண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

AIR TWF

எனவே, சட்டத்தை வாபஸ் வாங்க வலியுறுத்தியும், அநியாய தண்டனைகள், ஆன்லைன் பைன், வாகன வரி உயர்வு போன்றவற்றை கைவிட வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் பிரச்சாரம், கையெழுத்து இயக்கம் ”

2024 பிப்ரவரி 6 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம்

மனுக்கொடுத்து கண்டன ஆர்பாட்டம்

காலை 10.30 மணி இடம் : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

இரன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் -CITU / TNSTC-236/PDK புதுக்கோட்டை மாவட்ட அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் -CITU /AIRTWF பவுே எண். 168/PDK

106(1), 106(2) சட்டமானது ஓட்டுனர்களை கொலை குற்றவாளியாக்கும் கொடிய சட்டதிருத்தத்தை ரத்து செய்.

தலைமை: தோழர் க.ரெத்தினவேலு 
மாவட்ட பொதுச் செயலாளர்.
 
கண்டன உரை
K.முகமதலி ஜின்னா 
CITU மாவட்ட தலைவர்

A. ஸ்ரீதர்
CITU மாவட்ட செயலாளர் 

CITU நகர ஒருங்கிணைப்பாளர்A. முகமது  கனி


தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் .: 8610915780/9750779479
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments