கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், மீமிசல், தொண்டி வழியாக பேராவூரணி - ராமேஸ்வரம் இடையே பழைய பேருந்துக்கு பதில் புதிய பேருந்து இயக்கம்.




தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து, தடம் எண் 317-சி என்ற கும்பகோணம் போக்குவரத்துக்கழக அரசுப் பேருந்து காலை 7: 35 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு மதியம் 12 மணிக்கு சென்று சேரும். பின்னர் அங்கிருந்து மதியம் 1. 15 மணிக்கு புறப்பட்டு, பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வழியாக பேராவூரணிக்கு இரவு 12: 30 மணிக்கு வந்து சேரும் வகையில் இயக்கப்பட்டு வந்தது.  இதில் இயக்கப்பட்டு வந்த பேருந்து பழைய பேருந்தாக இருந்ததால், புதிய பேருந்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து, பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார், போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி புதிய பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். பேராவூரணி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பேருந்தின் பயணத்தை ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன், வை. ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் என். எஸ். சேகர் ஆகியோர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.   பேராவூரணி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் மகாலிங்கம், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், மாவட்ட கவுன்சிலர் சுவாதி காமராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், போக்குவரத்து கழகப் பணியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments