கடலோர போலீசார் செயல்பாடு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்




மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சார்பில் கடலோர பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடலோர போலீசாரின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமை தாங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு கடலோர போலீசார் கடலில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள், கடலோர போலீசார் உபயோகப்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் கடலோர போலீசார் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments