மீமிசலில் தீக்கிரையாகிய கடைகள்..! உரிய இழப்பீடு வழங்க TNTJ கோரிக்கை..!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் வியாழக்கிழமை (03-09-2026) அன்று அதிகாலை 2 மணியளவில் கடைவீதி பகுதிகளில் தீ பற்றியதில் 10 க்கும்  மேற்பட்ட கடைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகின.

இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலுள்ள பொருட்கள் எரிந்து மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். 

இச்சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று  சேதமடைந்த கடைகளை பார்வையிட்டனர். 

மேலும் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களை சந்தித்து, உரிய இழப்பீடு கிடைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முயற்சி எடுக்கும் என்று ஆறுதல் கூறினர். 

இறுதியாக மீமிசல் வர்த்தக சங்கத் தலைவர் அபூபக்கர் அவர்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முஹம்மது மீரான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் முஹம்மது மஹ்தூம், சைபுல் கரீம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசை TNTJ வலியுறுத்த வேண்டும் என  மாவட்ட நிர்வாகிகளிடம் வர்த்தக சங்கத் தலைவர் அபூபக்கர் அவர்கள் கோரிக்கை வைத்தார். 
அதனை ஏற்று தமிழக அரசையும், அதிகாரிகளையும் கண்டிப்பாக உரிய இழப்பீடு கிடைக்க வலியுறுத்துவோம் TNTJ புதுகை மாவட்ட நிர்வாகிகள் கூறினர்.

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர். புதுப்பட்டினம் மற்றும் கோபாலப்பட்டினம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments