அம்மாப்பட்டினத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 21 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டு விழா
அம்மாப்பட்டினத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 21 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அம்மாப்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அம்மாபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டயிருக்கும் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.டி இராமசந்திரன் அவர்கள் தலைமையிலும்

மணமேல்குடி ஒன்றிய துணைப் பெருந்தலைவர், ஒன்றிய கழகச் செயலாளர் திரு. எஸ்.எம்.சீனியார் அவர்கள் முன்னிலையிலும் அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.எஸ்.ஆர்.எம்.#அகமதுதம்பி  அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments