இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு


டெல்லியில் (09-02-2024) வெள்ளிக்கிழமை 
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்தித்தார்கள் 

தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ரயில்கள் நின்று செல்வது,

அறந்தாங்கி பகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகள்.,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி, இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் சூடையூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்வது,

காரைக்கால் - தூத்துக்குடி இடையே கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமான ரயில்வே திட்டத்தை  துவங்கி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது,

ராமேஸ்வரம் - சென்னை ரயில் பெட்டிகளை புதிய பெட்டிக்களாக மாற்றுவது, 

கோரோனா பொது முடக்கத்திற்க்கு முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்குவது,

ராமேஸ்வரம் வரையிலான புதிய ரயில்களை இயக்குவது,

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments