கோட்டைபட்டினத்தில் இருந்து அறந்தாங்கி புதிய பேருந்து வழித்தடத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து சரியான நேரங்களில் ஆவுடையார்கோவில் வழியாக தாழனூர் வேல்வரை மீமிசல் மற்றும்   கட்டுமாவடியிலிருந்து திருவாப்பாடி அத்தாணி கண்டிசான்காடு நாகுடி போன்ற பகுதிகளுக்கு சரியான நேரத்தில் பேருந்துகள் இல்லை என அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி பொது மக்கள்  கோரிக்கை வைத்தனர்  கோரிக்கையின் அடிப்படையில் இப்பகுதிகளில் புதிய பேருந்து சேவையை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி ராமச்சந்திரன் நேற்று பிப்ரவரி 11     கோட்டைப்பட்டினத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

பின்னர் அந்த பேருந்தில் பயணம் செய்த பயனாளிகள் அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பயண சீட்டு எடுத்து  கோட்டைப்பட்டினத்தில் இருந்து  அம்மாபட்டினம் வரை பேருந்தில் பயணம் செய்தார் 

இந்த நிகழ்ச்சியில் மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் சீனியர் மற்றும் கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆவுடையார் கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர் கூடலூர் முத்து மற்றும் மணமேல்குடி ஒன்றிய காங்கிரஸ் வட்டார தலைவர் சரவணன் அறந்தாங்கி ஒன்றிய காங்கிரஸ் வட்டார தலைவர் முருகன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திமுக கட்சி நிர்வாகிகள் போக்குவரத்து துறை அதிகாரிகள்  என பலர் கலந்து கொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments