திருவாரூர்- பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே OMS Special அதிவேக சோதனை ஓட்டம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
திருவாரூர்- பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே OMS Special அதிவேக சோதனை ஓட்டம் - தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது 

ரயில் பாதையில் அடிக்கடி உறுதித்தன்மை  தண்டவாள அதிர்வுகளை நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் 

நாளை 13/02/2024  பகல் 1.00மணி முதல் மாலை 5.00மணிக்குள் திருவாரூர்- பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே
OMS Special அதிவேக சோதனை ஓட்டம் (121 கீமீ) நடைபெற இருக்கிறது
 
 இருப்புபாதை உறுதித்தன்மை மற்றும் தண்டவாள அதிர்வுகளை ஆய்வு செய்திடும் OMS  அதிவேக ஆய்வு ரயில் மற்றும் அதிவேக  சோதனை ஓட்டம் 121Kmph  வேகத்தில் இயக்கப்பட உள்ளது.

 எனவே ரயில் வழித்தடத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இருப்புபாதைகளை கடப்பதையோ, ரயில்பாதை அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதையோ இருசக்கர வாகனங்களை கடவுபாதையில் நுழைத்து கடப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ரயில் பாதை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இருப்புபாதைகளை கடப்பது, ரயில்பாதை அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது, மூடி இருக்கும் ரயில்வே கேட் வழியாக  நடந்து செல்வது, இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, வேகமாக செல்லும் ரயில் அருகில் சென்று செல்போன் மூலம் போட்டோ ,வீடியோ, செல்ஃபி எடுப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் ரயில் பாதை அருகில் செல்லாமல்  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 ஆகையால் பொதுமக்கள் இரயில் பாதைகளை கடப்பதையும் மூடியிருக்கும் இரயில்வே கேட்டுகளை கடப்பதையும் ,
இரயில் பாதை அருகில் கால்நடைகள் மேய்ப்பதையும் ,
செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் .
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments