அடிப்படை வசதி செய்ய மறுக்கும் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி நிர்வாகம் & வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து வருகிற பிப்.21 தமுமுக சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம்!



நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம், R.புதுப்பட்டினம் பகுதிகளில் அடிப்படை வசதி செய்ய மறுக்கும் ஆவுடையார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து வருகிற 21/02/2024 மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமுமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதி செய்ய மறுக்கும் ஆவுடையார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து தமுமுக சார்பில் வருகிற 21/02/2024 புதன்கிழமை அன்று ஒன்றிய செயலாளர் நவாஸ்கான் தலைமையில் மீமிசல் செக்போஸ்ட் அருகில்  சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.
  • மீமிசல் செக்போஸ்ட் முதல் ஆர்.புதுப்பட்டினம் ஊருக்குள் செல்லும் சாலை குண்டு குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் இருப்பதால் உடனடியாக புதிய சாலை அமைக்க பலமுறை கோரிக்கை வைத்து நிறைவேற்றாததை கண்டித்தும்.
  • R.புதுப்பட்டினம் முஸ்லீம் தெருவில் கழிவு நீர் கால்வாய் அமைக்க 2021-2022ம் ஆண்டு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 15 வது நீதிக்குழு நிதியை வேறு ஊர்களுக்கு மாற்றி R.புதுப்பட்டினம் முஸ்லீம் தெருவில் கால்வாய் அமைக்க மறுக்கும் ஊராட்சியை கண்டித்தும்.
  • சுவர் மற்றும் குளம் பராமரிப்புக்கு வழங்கப்பட்ட நிதியை எவ்வித செலவு செய்யாமலும் தடுப்புச்சுவர் கட்டியதாக கணக்கு காட்டி பணம் எடுத்த அலுவலர்களின் செயல்களை கண்டிந்தும், உடனடியாக தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும்.
  • கோபாலபட்டிணத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 120 புதிய தண்ணீர் குழாயை அமைத்ததாக பொய்க்கணக்கு காட்டிய நபர்கள் மீதும் அதற்கு துணைப்போன ஊராட்சி மன்றத்தை கண்டித்து.
  • கோபாலபட்டிணத்தில் மற்றும் ஆர்.புதுப்பட்டினம் பகுதிகளில் குப்பைகளை அள்ளாததால் ஊர் முழுவதும் குப்பை மேடாக மாறிய அவல நிலையை கண்டித்தும்.
  • கடந்த 15.12.2021 அன்று வட்டாச்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் கோபாலப்பட்டிணம் கடல் முகத்துவார ஆற்றின் ஓரங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் அருகில குப்பைகளை கொட்ட கூடாது என எடுக்கப்பட்ட முடிவினை மீறி குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட முயல்வதை கண்டித்தும்.
  • ஆர்.புதுப்பட்டினம் கோபாலப்பட்டிணம் உள்ளடக்கிய நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்கு தனியாக குப்பை கொட்டுவதற்கு இடம் ஒதுக்க வலியுறுத்தியும் முஸ்லீம் குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டியும்.


இவன்:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டம்.

தகவல்: 
B.சேக் தாவூதீன்
மாவட்ட தலைவர்
தமுமுக-மமக
புதுக்கோட்டை(கிழக்கு)மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments