மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு




மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தூண்டில் வளைவு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உளள மல்லிப்பட்டினத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.65 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. அப்போது இந்த துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு சென்றுவந்தது.

புதிதாக கட்டப்பட்ட துறைமுகத்தில் படகுகளை பாதுகாக்கும் வண்ணம் தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருந்தது. அதன்படி தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை.

மீனவர்கள் முறையீடு

தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக முறையிட்டு வருகிறார்கள். ஆனாலும் பலனில்லை. தூண்டில் வளைவு இல்லாததால் கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் வீசியோபது இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சுக்கு நூறாக உடைந்தன.

இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு தற்போது துறைமுகத்தில் இருந்து 100-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே படகுகள் மட்டுமே மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகிறது.

அச்சம்

அதேசமயம் எதிர்காலங்களில் பருவமழையின் தாக்கம் அதிகமாகவோ, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளாலோ படகுகளுக்கு மீண்டும் சேதம் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே படகுகளை பாதுகாக்கும் வகையில் மல்லிப்பட்டின ம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments