மீமிசலில் முன்னாள் ஐக்கிய வர்த்தக சங்க தலைவர் K.S அப்துல் ரகுமான் மறைவுக்கு மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் சார்பில் மௌன அஞ்சலி & ஊர்வலமாக சென்றும் மரியாதை




மீமிசலில் முன்னாள்  ஐக்கிய வர்த்தக சங்க தலைவர் K.S அப்துல் ரகுமான் மறைவுக்கு மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் சார்பில் மௌன அஞ்சலி & ஊர்வலமாக சென்றும் மரியாதை செலுத்தினர் 

புதுக்கோட்டை மாவட்டம்  கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத் முன்னாள் தலைவர். ஜனாப்.KS. அப்துல் ரகுமான் நேற்று.21/2/204. புதன்கிழமை காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத் தலைவர் M.அபூபக்கர் தலைமையில் ஐக்கிய வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சுமார் சில மணி நேரம் கடைகளை அடைத்து விட்டு மீமிசல் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்கள்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments