திருப்புனவாசல் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் மறியல்




திருப்புனவாசல் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல் கொள்முதல் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே திருப்புனவாசல் அருகே புத்தாம்பூர், காடத்திவயல், பறையத்தூர், இடையூர், வெட்டிவயல், எட்டிசேரி உள்ளிட்ட பகுதியில் நெல் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விளைவித்த நெல்களை விற்பனை செய்ய அப்பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் இல்லை.

இந்த பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காமல் உள்ள அதிகாரிகளின் அலட்சிய போக்கால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். வானம் பார்த்த பூமியாக உள்ள ஆவுடையார்கோவிலில் இந்த ஆண்டு ஓரளவு பெய்த மழையில் விளைந்த நெல்களை அறுவடை செய்து 4 நாட்களாக வைத்துள்ளோம். மேலும் இப்பகுதியில் கொள்முதல் நிலையம் இல்லாததால் நெல் மணிகளை டிராக்டரிகளில் வைத்தவாறு என்ன செய்வெதன்று தெரியாமல் உள்ளனர்.

சாலை மறியல்

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று அதிகாரியிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது கோடை மழை தொடங்க உள்ளதால் நெல் மணிகள் முளைத்து விடும் அவல நிலையில் உள்ளது. எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு ஆவுடையார்கோவில் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கூறி திருப்புனவாசலில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்சமயம் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments