அதிராம்பட்டினம் நகராட்சிக்கு ரூ.3½ கோடியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டுவிழா




அதிராம்பட்டினம் நகராட்சிக்கு புதிய நகராட்சி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது இதையடுத்து அதிராம்பட்டினம் கடற்கரை போலீஸ் நிலையம் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.3.50 கோடியில் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் நகராட்சி தலைவர் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நட்டினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ராமகுணசேகரன், நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, பட்டுக்கோட்டை நகராட்சி பொறியாளர் குமார், நகர செயற்குழு உறுப்பினர் அப்துல்ஹலீம் மற்றும் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள், அனைத்து ஜமாத்தார்கள், அனைத்து கிராம பஞ்சாயத்தர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments