‘அம்ரித்’ திட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரூ.14½ கோடியில் பணிகள் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்




அம்ரித் திட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.14½ கோடியில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

அடிப்படை வசதிகள்

ரெயில் நிலையங்களில் அம்ரித் திட்டத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரெயில்வே திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் புதுடெல்லியில் இருந்தப்படி பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் அடிக்கல் நாட்டியும், திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

இதில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும் ரூ.14 கோடியே 48 லட்சத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிக்காக புதுக்கோட்டை ரெயில் நிலைய வளாகத்தில் விழா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் காணொலியில் ஒளிபரப்பப்பட்டன. இதில் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், பா.ஜனதாவினர், காங்கிரஸ் கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மாணவ-மாணவிகள், ரெயில்வே அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நுழைவு வாயில்

இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தப்படுவது தொடர்பான வீடியோ ஒளிபரப்பப்பட்டன.

ரெயில் நிலையத்தில் புதிய நுழைவுவாயில், வாகனங்கள் நிறுத்த விரிவான இட வசதி, கட்டிடத்தின் முகப்பு தோற்றம் மாற்றம் உள்பட நவீனமயமாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது லிப்ட் வசதி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடைமேடைகளில் மேற்கூரைகள் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த திட்டப்பணிகள் முடிவடைந்ததும் புதுக்கோட்டை ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன் காணப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments