மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து, அதிர்ஷ்டவசமாக காயமின்றி அனைவரும் உயிர்தப்பினர்


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று 17-02-2024 அதிகாலை 4 மணியளவில் வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்த கார் காயிதே மில்லத் நகர் பகுதிக்கு எதிரே உள்ள மின்கம்பம் மீது மோதி விபத்து ஏற்பட்டது 

அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்கள் இன்றி அனைவரும் உயிர் தப்பினர்.வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு வாகனத்தை வெளியே எடுத்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி பிரார்த்தனைக்காக குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த வாகனத்தின் முகப்பு விளக்கின் அதிகமான வெளிச்சத்தாலும்,டிராக் மாறி வந்ததன் காரணத்தால் பெரும் விபத்தை தவிர்க்கவே வாகனத்தை கீழே இறக்கியதாக வாகனத்தை ஓட்டி வந்தவர் தெரிவித்தார்.

இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனம் டூவீலரா, நான்கு சக்கர வாகனமா என தெரியாத அளவிற்கு முகப்பு விளக்குகள் அதிக பிரகாசமாக உள்ளது. 

இதனை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments