கோபாலப்பட்டிணத்தில் மார்ச் 03 இரண்டு இடங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்






கோபாலப்பட்டிணத்தில் இன்று மார்ச் 03 இரண்டு இடங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிப்பதற்காக, ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், கடந்த மூன்றாண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு தவணை மட்டுமே போடப்படுகிறது


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று  (03-03-2024) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இரண்டு இடங்கள்:

1.அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் (பால்வாடியில்),

2.காட்டுகுளம் பள்ளிவாசல் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் (பால்வாடியில்) 

அதுசமயம் பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் அழைத்து சென்று பயன்பெறுமாறு GPM MEDIA சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

 வளமான வாழ்விற்கான இரு துளிகள் ஐந்து வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் தவறாமல் மீண்டும் சொட்டு மருந்து கொடுத்திடுவோம்.

5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்!
 
போலியோ சொட்டு மருந்து கொடுப்போம் !

போலியோ இல்லாத உலகை உருவாக்குவோம் !!

போலியோ சொட்டு மருந்து முகாம்: அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்.

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விடுத்திருக்கும் அறிக்கையில்,

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும்.

இம்மையங்களில் 57.84 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

1. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

2. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

3. தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவுவது / சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.

4. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

5. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

6. விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

7. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

8. புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோசொட்டு மருந்து வழங்கப்படும்.

9. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.

10. போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11. நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12. போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

13. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments