மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அறந்தாங்கியில் 5-ந் தேதி நடக்கிறது




அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி காலை 10 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு செய்தல், காப்பீட்டு அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவேற்றம் செய்ய முடியாத கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முகாமில் ஆதார் அட்டை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கிக்கடனுதவி பரிந்துரை, உதவி உபகரணங்கள் பரிந்துரை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா, கூட்டுறவு வங்கியின் மூலமாக தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதியுதவி கழகத்தின் வட்டியில்லா கடனுதவி மற்றும் பிற அரசுத்துறைகள் மூலமாக வழங்கப்படும் உதவிகள் பரிந்துரைகள் செய்வதற்கு அனைத்து அரசுத்துறைகளும் ஒருங்கிணைத்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

எனவே, அறந்தாங்கி தாலுகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம் 6 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம், என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments