பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை 4,310 விவசாயிகள் இணைக்கவில்லை தவணை தொகை பெற பதிவேற்ற அறிவுறுத்தல்




பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை 4,310 விவசாயிகள் இணைக்கவில்லை எனவும், தவணை தொகை பெற பதிவேற்றம் செய்ய வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதார் எண்

பிரதம மந்திரி விவசாயிகளின் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் 01.02.2019-க்கு முன்பு நேரடி பட்டா உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக ஏப்ரல்-செப்டம்பர், ஆகஸ்டு- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 4,310 பயனாளிகள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர்.

கிராம பொறுப்பு அலுவலர்கள்

இதேபோல இத்திட்டத்திற்கான இணையதளத்தில் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,146 பயனாளிகள் ஆதார் விவரத்தை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். மேற்கூறிய நிபந்தனைகளை விரைந்து முடிக்கும் பொருட்டு செறிவூட்டல் முனைப்பு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இந்த இயக்கத்தில் கிராமங்கள் தோறும் கிராம பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை தெரிந்துகொள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும். தகுதி உள்ள விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை அணுகி தவணை தொகை ஏன் வரவு வைக்கப்படவில்லை என்பதை தெரிந்துகொண்டு அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments