முத்துப்பேட்டையில் ரமலானில் வீணடிக்கப்படும் பல லட்சங்கள்.. ஆடம்பர சஹர், இஃப்தார் பார்டிகள் முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பில் ரமலானின் ஆடம்பர சஹர் விருந்துகள் வைப்பதை தவிர்த்து அந்த தொகையை பைத்துல்மாலுக்கு வழங்க வேண்டுகோள்






முத்துப்பேட்டையில் ரமலானில் வீணடிக்கப்படும் பல லட்சங்கள்..
ஆடம்பர சஹர், இஃப்தார் பார்டிகள்  முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பில் ரமலானின்  ஆடம்பர சஹர் விருந்துகள் வைப்பதை தவிர்த்து அந்த தொகையை பைத்துல்மாலுக்கு வழங்க வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.

இது குறித்து முத்துப்பேட்டை ஜக்கிய ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

அனைத்து ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் மற்றும் முஹல்லாவாசிகளுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் இவ்வருட புனித ரமலான் மாதம் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. ஈகை நிறைந்த இந்த மாதத்தில் நமது ஊர் பள்ளிவாசல்களில் கடைசி 10 நாட்களுக்கு நடத்தப்படும் சகர் விருந்து என்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத ஒரு நிகழ்வாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நமது ஊர் இளைஞர்கள் வெளிநாடுகளில் குடும்பத்தினரைப் பிரிந்து வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை ஒவ்வொரு பள்ளிவாசலிலும் போட்டி போட்டுக்கொண்டு, விருந்துகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் 50 இலட்சத்தில் இருந்து 70 இலட்சம் வரை செலவு செய்யப்பட்டு வருகிறது.

நோன்பின் மகத்துவமே நப்ஸ் அடக்கமும், முறையான தர்மமும், பின்னி பிணைந்து இருப்பதில்தான் இருக்கிறது. இன்ஷா அல்லாஹ். இன்ஷா அல்லாஹ். இவை அனைத்தும் கடந்த வருடம் வரை நடந்ததாக இருக்கட்டும். இவ்வருட ரமலாளில் இதனை நாம் அனைவரும், ஒன்று சேர்ந்து நிறுத்தி (27 பிறை) (லைலத்துல்கதிர் இரவு நீங்கலாக) நமது இன்ஷா அல்லாஹ், விரைவில் தொடக்கப்படவிருக்கும் பைத்துல்மால் (வட்டி இல்லா கடன் திட்டம்) இந்த திட்டத்தில் சகர் உணவு கொடுக்க செலவு தொகையினை கொடுத்து உதவினால் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஐக்கிய ஜமாத் பணத்துடன் சேர்த்து நமது வாரில் சிறு தொழில் செய்வோர் மருத்துவ உதவித்தேவை, கல்வி மற்றும் பிற அவசரத்தேவைகளுக்கு வட்டி இல்லாமல் கடன் கொடுத்து ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் செழித்திட உதவும் பரிசீலனை செய்து அனைத்து முஹல்லாவைச் சேர்ந்தவர்களும் நல்லதொரு முடிவினை எடுத்து உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments