புதுக்கோட்டை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நார்த்தாமலை காப்புக்காட்டில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 288 பறவைகள் இருந்தது தெரியவந்தது.

பறவைகள் கணக்கெடுப்பு

ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை மூலம் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நிலப்பரப்புகளில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வனச்சரகத்தில் உள்ள 25 நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மன்னர் கல்லூரி விலங்கியல் துறை தலைவர் பழனிச்சாமி தலைமையில் வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

நார்த்தாமலை காப்புக்காடு

புதுக்கோட்டை வனச்சரகத்தில் நார்த்தாமலை காப்புக்காட்டில் அரையகருப்பர் கோவில் பகுதி, வன சூழியல் பண்ணை பகுதி, முள்ளூர் காப்புக்காடு, மணியாச்சி காப்புக்காடு மற்றும் வேப்பங்குடி ஆகிய வனப்பகுதிகளில் வனச்சரக அலுவலர் சதாசிவம், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனகாப்பாளர்கள், வனக்காவலர் மற்றும் 25 நபர்களை கொண்டு 5 குழுக்கள் அமைக்கப்பட்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் புதுக்கோட்டை வனச்சரகத்தில் நார்த்தாமலை காப்புக்காட்டில் 26 வகையான பறவை இனங்களில் 593 எண்ணிக்கையிலான பறவைகள் காணப்பட்டதாக கணக்கீடு செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 288 பறவைகள் கூடுதலாக இருந்தது தெரியவந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments