அறந்தாங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்




அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு துறைகளிலும் ஒன்றிணைந்து ஒற்றை சாளர முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா தலைமை தாங்கினார். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை யு.டி.ஐ.டி. பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவேற்றம் செய்ய முடியாத கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கிக்கடன் உதவி பரிந்துரை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இம்முகாம் மூலம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகாமில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 44 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர், மடக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. முகாமில் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உதவி திட்ட அலுவலர் ராஜா முகமது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன், தனி தாசில்தார் நாகநாதன் மற்றும் அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments