புதுக்கோட்டை வடக்கம்மாபட்டினம் கிராமத்தில் மீன் இறங்குதளம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்




கரூர் திருக்காம்புலியூரில் மீன் விதைப்பண்ணையும், புதுக்கோட்டை வடக்கம்மாபட்டினம் கிராமத்தில் மீன் இறங்குதளத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

கலெக்டர்களுக்கு பாராட்டு

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் மற்றும் பாராட்டு பத்திரங்கள் ஆகியவற்றை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளில் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.அந்த வகையில், 2023-2024-ம் ஆண்டில், மாவட்டத்தின் பிறப்பு பாலின விகிதம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், உயர் பிறப்பு விகிதம் மற்றும் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள், சட்டம் ஆகிய காரணிகளை கவனமுடன் பரிசீலித்ததில், ராமநாதபுரம், காஞ்சீபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட நிர்வாகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அந்த மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளதை பாராட்டி, ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு தங்கப்பதக்கமும், காஞ்சீபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனுக்கு வெள்ளிப்பதக்கமும், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிற்கு வெண்கலப்பதக்கமும், பாராட்டு சான்றிதழ்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டினார்.

மீன் இறங்குதளங்கள்

கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் நவீனப்படுத்தப்பட்ட மீன் விதைப்பண்ணை, புதுக்கோட்டை மாவட்டம் வடக்கம்மாபட்டினம் மீனவ கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ரூ.136.75 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப்பண்ணை ஆகியவற்றை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments