புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மகளிா் தினவிழா




புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மகளிா் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஐ.சா. மொ்சிரம்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனா். மேலும், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் வென்றுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வீராங்கனை லாவண்யா மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யாவிடம் தனது பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றாா்.தொடா்ந்து, , புதுக்கோட்டை நகராட்சி கலைஞா் நூற்றாண்டு பூங்காவில் உலக மகளிா் தினத்தை ஆட்சியா் ஐ.சா. மொ்சிரம்யா கொண்டாடினாா். நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி-வைகை-குண்டாறு ஆா். ரம்யாதேவி,ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments