சென்னை தாம்பரம் - செங்கோட்டை SF எக்ஸ்பிரஸ் ரயில் நாளை 10-03-2024 முதல் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.




திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் சென்னை தாம்பரம் - செங்கோட்டை SF  எக்ஸ்பிரஸ் ரயில் நாளை 10-03-2024 முதல் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி ‌காரைக்குடி வழியாக
சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை  இயக்கப்பட்டு வருகிறது 

வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (Sun , Tue, Thu)

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும் 
ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்  திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் காலை 10.50 மணிக்கு   செங்கோட்டை சென்றடையும். 

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் (Mon , Wed, Fri)

செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள்  செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்

இனி தாம்பரம் செங்கோட்டை அதி விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு, 
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்),
மயிலாடுதுறை சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
முத்துப்பேட்டை,
பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி,
காரைக்குடி சந்திப்பு, 
அருப்புக்கோட்டை,
விருதுநகர் சந்திப்பு, 
திருநெல்வேலி சந்திப்பு,
சேரன்மகாதேவி,
கல்லிடைக்குறிச்சி,
அம்பாசமுத்திரம்,
பாவூர்சத்திரம்,
தென்காசி சந்திப்பு, 

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

கல்லிடைக்குறிச்சியில் 

இந்நிலையில் வண்டி எண் 
20683 தாம்பரம் -  செங்கோட்டை 10-03-2024 முதல் 
மாறுமார்கத்தில்
20684  செங்கோட்டை - தாம்பரம் 11-03-2024 முதல்  கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

இதனால் கல்லிடைக்குறிச்சி & சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments