கோபாலப்பட்டிணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிளை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA வழங்கினார்கள்




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் கற்றல் கற்பித்தலில் எவ்வித இடையூறும் இன்றி, முழுமையாக கல்வியைப் பெறுவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகிறது. குறிப்பாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் , உயர் கல்வியில் 7.5 ( மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்பு) புதுமை பெண் திட்டம் ( உயர் கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் கல்வி பயிலும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி அவர்களது மேல்நிலைக் கல்வியை உறுதி செய்கிறது.

முக்கியமாக மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் தூரத்தைக் காரணம் காட்டி, பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு விடாமல் பள்ளிக்குச் சென்று வர உதவியாகவும் இடைநிற்றலை முற்றிலுமாக தவிர்த்திடும் பொருட்டும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே  கோபாலப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 09.03.2024  சனிக்கிழமை அன்று 54 மாணவ மாணவிகளுக்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. இராமசந்திரன் வழங்கினார்.

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. இராமச்சந்திரன் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள்  PTA தலைவர் மற்றும் உறுப்பினர்கள் SMC தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஜமாத்தார்கள், ஊராட்சி நிர்வாகிகள், மாணவ மாணவிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments