அருணாசல பிரதேசத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் உலகிலேயே மிகவும் நீளமான இரட்டை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார்.
ரூ.825 கோடி
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள தவாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பலிபாரா-சாரிதுவார்-தவாங் சாலை பிரதான சாலையாக உள்ளது.
ஆனால் கனமழையால் ஏற்படும் நிலச்சரிவு, பனிப்பொழிவு போன்ற நிகழ்வுகளால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே இங்குள்ள சேலாவில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து எல்லை சாலை அமைப்பினர் இந்த சுரங்கப்பாதை பணிகளை தொடங்கினர். அதன்படி சுமார் 13,000 அடி உயரத்தில் ரூ.825 கோடியில் இரட்டை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே மிகவும் நீளமானதாக கருதப்படுகிறது.
அனைத்து காலநிலையிலும் இயங்கும்
இதில் ஒரு சுரங்கப்பாதை 1,003 மீட்டரில் ஒருவழி கொண்டதாக உள்ளது. இரண்டாவது பாதை 1,595 மீ. நீளமுடையது. இதில் அவசர காலங்களில் வெளியேறுவதற்கான வழிகள் அடங்கி இருக்கிறது. மேலும் 8.6 கி.மீ நீளம் கொண்ட அணுகு மற்றும் இணைப்புச் சாலைகளையும் கொண்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதை மூலம் அனைத்து காலநிலைகளிலும் இந்த பகுதியில் போக்குவரத்து நடைபெற வசதி ஏற்பட்டு உள்ளது. அத்துடன் ராணுவமும் விரைவாக எல்லையை அடைய வழி ஏற்பட்டு இருக்கிறது.
இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அருணாசல பிரதேச அரசு போக்குவரத்து கழக பஸ் போக்குவரத்தை இதன் வழியாக கொடியசைத்து தொடங்கி வைத்து அவர் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ரூ.55,600 கோடி திட்டங்கள்
இந்த நிகழ்ச்சியில் சேலா சுரங்கப்பாதை உள்பட மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அருணாசல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ரூ.55,600 கோடி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதில் அருணாசல பிரதேசத்தில் மட்டுமே ரூ.41,000 கோடிக்கான பணிகள் நடந்துள்ளன. இதில் முக்கியமாக, பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்ட 35,000 வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.