நாகப்பட்டினம் - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை தற்போது நிலை என்ன - வாங்க பார்க்கலாம்...




நாகை - தூத்துக்குடி இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு  தொடர்பான தகவல்கள் இந்த பதிவில் காண்போம்.

சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை நான்கு வழி கடற்கரை சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன் ஒரு பகுதியாக நாகை முதல் தூத்துக்குடி வரை புதிதாக பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

பசுமை 4 வழிச்சாலை

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.9,000 கோடியில் 312 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 90% பசுமை வழிச்சாலை என்பதால் விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதிக அளவில் பாலங்கள் கட்டப்படவுள்ளன. அதன்படி, இந்த பசுமை வழிச்சாலையில் 37 பெரிய பாலங்கள், 55 சிறிய பாலங்கள், 690 சிறிய கால்வாய் நீரோடை பாலங்கள் அமைய உள்ளன.


நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பசுமை வழிச்சாலையால் பெரியளவில் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே தயாரித்துள்ளது. மேலும் , தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல இந்த பாதை மாற்று வழியாக அமையும் என கூறப்படுகிறது. . 


இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்த பின்னர், தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நாகப்பட்டினம் - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை தற்போது நிலை என்ன - RTI கேள்விக்கு நெடுஞ்சாலை பதில் அளித்துள்ளது வாங்க பார்க்கலாம்

கேள்வி: நாகப்பட்டினம் தூத்துக்குடி நான்கு வழிச்சாலையின் தற்போதைய நிலை விரிவான திட்டம்

பதில்: இறுதி விரிவான திட்ட அறிக்கை வேலை அறிக்கை செயலாக்கத்தில் உள்ளது. விரைவில் நிறைவடைகிறது 

கேள்வி: நாகப்பட்டினம் தூத்துக்குடியின் தற்போதைய நிலை நான்கு வழிச்சாலை நிலம் கையகப்படுத்தும் செயல்முறை

பதில்: 3A தொடங்கப்பட வேண்டும். (அதாவது நில எடுப்பு சட்டத்தின் கீழ் நில எடுப்பு பாதிக்கப்பட்ட கூடிய நபர்கள் பட்டியல் நாளிதழ்கள் மூலம் வெளியிடப்படும் )

News Credit : 

நாகை அரவிந்த் குமார்
செயலாளர்
நாகை டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமர் புரெடக்சன் அண்ட் பேஸஞ்சர் அசோசியேஷன்
நாகப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments