கோபாலப்பட்டிணத்தில் 2024 ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிப்பு




கோபாலப்பட்டிணத்தில் 2024 ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிப்பு 

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் இந்த வருடம் (2024) ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்படுள்ளது.

அந்த வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எந்த இடத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்படுள்ளது

ஆண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்கள் :

கோபாலப்பட்டிணத்தில் ஆண்களுக்கு 4 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.

* ஜீம்ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் (மக்கா தெரு)

* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)

* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)

* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )

பெண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்கள் :

கோபாலப்பட்டிணத்தில் 
பெண்களுக்கு 4 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.

* ரஹ்மானியா பெண்கள் மதரஸா நூருல் அய்ன் வளாகம் (அரஃபா தெரு)

* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)

* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)

* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )

இஷா & தராவிஹ் நேரங்கள்

இஷா பாங்கு  :  7.46 PM 

இஷா இகாமத்:   

8:30 PM (ரஹ்மானியா பெண்கள் மதரஸா நூருல் அய்ன் வளாகம்  - பெண்களுக்கு மட்டும்)

8.45 PM (அனைத்து பள்ளிவாசல்) 

இஷா பின்சுன்னத் தொழுகைக்கு பிறகு அனைத்து இடங்களிலும் தராவீஹ் உடனே ஆரம்பமாகிவிடும். 

ரமலான் மாதம் முடியும் வரை இஷா இகாமத் & தராவீஹ் நேரத்தில் மாற்றம் இல்லை என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம். 

 ரமலான் மாதம் தொழுகை & நோன்பு பற்றிய திருக்குர்ஆன் வசனம் & ஹதீஸ்

 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
(அல்குர்ஆன் : 2:183)

”நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
(புஹாரி: 37, முஸ்லிம்: 759-173)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments