மீமிசல் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா பறிமுதல் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை




மீமிசல் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, மீமிசல், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் கடற்கரை பகுதியாகும். இங்கிருந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்து சில நேரங்களில் மர்ம கும்பல் இலங்கைக்கு கடல் மார்க்கமாக படகு மூலம் கஞ்சா கடத்த முயற்சிக்கும் சம்பவமும் அவ்வப்போது நடப்பது உண்டு.

இதில் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு, கஞ்சா பொட்டலங்களை பண்டல், பண்டலாக பறிமுதலும் செய்துள்ளனர். இந்த நிலையில் மீமிசல் அருகே கஞ்சா கடத்தப்படுவதாக ராமநாதபுரத்தை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் மீமிசல் வந்து கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு கொண்டு சென்றதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

400 கிலோ கஞ்சா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சுமார் 400 கிலோ அளவில் இருக்கும் எனவும், அது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விவரம் தெரிவிப்பார்கள் என போலீஸ் வட்டாரத்தில் கூறினர். மேலும் இலங்கைக்கு படகில் கடல் மார்க்கமாக கஞ்சாவை கடத்த முயற்சித்த கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கடற்கரை பகுதியில் இருந்து கைப்பற்றியதாகவும், எஸ்.பி.பட்டினத்தில் இது தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிப்பதாகவும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments