மீமிசல் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இறால் பண்ணைகள் அகற்றம்




மீமிசல் அருகே நீதிமன்றம் உத்தரவின்படி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இறால் பண்ணைகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகள்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள நாட்டானிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள உப்பலத்தில் சிலர் இறால் பண்ணை அமைத்துள்ளனர். இந்த இறால் பண்ணை அமைத்துள்ள இடம் அரசு நிலம் என்பதால் இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சட்ட விரோதமான மின் இணைப்பை மின்சார வாரிய அதிகாரிகள் ரத்து செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த இறால் பண்ணைகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அதிகாரிகள் அகற்றினர்.

இடித்து அகற்றம்

கடந்த 3 தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் இயங்கி வந்த இறால் பண்ணையில் ரூ.110 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட இடமும் அரசு புறம்போக்கு இடமாகும். நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த இடத்தையும் வருவாய் துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர் போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

இதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா, ஆய்வாளர் சாதிக் பாஷா, கனகராஜ், மற்றும் ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், மீமிசல் வருவாய் ஆய்வாளர் விஜயா ஆகியோர் உடனிருந்தனர். கோட்டைப்பட்டினம் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு கவுதமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments