சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் மனோராவில் கடல்பசு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் வலையில் சிக்கிய கடல்பசுவை கடலுக்குள் விட்ட மூதாட்டிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு




சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் மனோராவில் கடல் பசு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் வனத்துறை மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்தது. கூட்டத்தில் தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி கலந்து கொண்டு அரிய வகை உயிரினமான கடல் பசு மற்றும் கடல் ஆமைகளை பாதுகாப்பதன் அவசியம் பற்றி மீனவர்களிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து வலையில் சிக்கிய கடல் பசு மற்றும் கடல் ஆமைகளை மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் வலையில் சிக்கிய சினையாக இருந்த கடல்பசுவை மீண்டும் கடலுக்குள் விட்ட மயில்(வயது70) என்ற மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்துக்கு ரூ.20ஆயிரம் பரிசு வழங்கி மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். அதேபோல் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமைகளை மீண்டும் கடலுக்குள் விட்ட 2 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், வைல்ட் லைப் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா ஆய்வாளர் சுவேதா ஐயர், டாக்டர் பாலாஜி, மீன் வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments