அறந்தாங்கி வழியாக காரைக்குடி- திருவாரூர் இடையே விரைவில் 3 புதிய ரயில்கள்




திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர்-காரைக்குடி இடையேயான 149.5 கி.மீ ரயில் வழித்தடம் 3 ஆண்டுகளுக்கு முன் அகல ரயில் பாதையாக தரம் உயர்த்தப்பட்டு, சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழியாக சென்னை, எர்ணாகுளம், வேளாங்கண்ணி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில்கள் சென்று வருகின்றன.

இந்த வழித் தடத்தில் தற்போது பயணிகள் மற்றும் விரைவு ரயில் கள் 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் களின் வேகத்தை 110 கிலோமீட்டர் அளவுக்கு அதிகப்படுத்தி இயக்கு வதற்காக ரயில்வே நிர்வாகம் அதி வேகத்தில் ரயில்களை இயக்கி சோதனையிடுவது வழக்கம்.

அதன்படி, 2023 அக்டோபர் 17-ம் திருவாரூர் - காரைக்குடி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதில், 121 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதையடுத்து, இந்த வழித்தடத் தில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணி, கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப் பட்டு வந்ததால், 3 புதிய ரயில் களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, காரைக்குடி- மயிலாடுதுறை இடையே தினசரி விரைவு ரயில், திருவாரூர்- காரைக்குடி இடையே பயணிகள் ரயில், செகந்திராபாத்- ராமேசுவரம் இடையே வாராந்திர விரைவு ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரயில்கள் இயக்கம் தொடங்கும் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளி யாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments