அறந்தாங்கியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி




அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறைகள் குறித்து முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது. தேர்தல் அதிகாரி சிவக்குமார் தலைமை தாங்கினார். பயிற்சியில் அறந்தாங்கி தாசில்தார் திருநாவுக்கரசு, ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், மணமேல்குடி தாசில்தார் சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள 30 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறை குறித்து முதல் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அறந்தாங்கி மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், தேர்தல் துணை தாசில்தார் இளஞ்சேரன், உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments