உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதால் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.91 ஆயிரம் பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை




உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வாகன சோதனை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவுடையார்கோவில்-மீமிசல் ரோட்டில் பிராந்திணி முக்கம் அருகே வந்த வேனை மடக்கி சோதனையிட்டனர்.

ரூ.91 ஆயிரம் பறிமுதல்

இதில் சேமியா ஏஜெண்டு நிறுவனத்தின் காசாளர் சவுந்தர், சேமியா விற்ற பணத்தை வசூல் செய்து ரூ.91,250 கொண்டு வந்தது தெரியவந்தது. ஆனால் சேமியா விற்பனைக்கான ரசீது இருந்தும், அந்த ரசீதில் கடையின் உரிமையாளரின் கையொப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ரூ.91,250-ஐ தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து அறந்தாங்கி ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments