உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் பணத்தை திரும்ப பெறும் வழிமுறைகள் தேர்தல் அதிகாரி விளக்கம்




உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்வதில் பறிமுதல் செய்யப்படும் பணத்தை திரும்ப பெறும் வழிமுறைகள் பற்றி தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

குறைதீர்க்கும் குழு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் விதிமுறைகளை மீறி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் இதர பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் பறிமுதல் செய்யப்படுகிறது.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மீறிய வகையில் இல்லாமல், தனது சொந்த தேவைக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்பதற்கு உரிய ஆவணங்களை மாவட்ட குறைதீர்க்கும் குழுவில் தெரிவிக்க தினந்தோறும் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக, புதிய வளாகத்தில், 2-ம் தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை, பொருட்களுக்கான தங்கள் வசம் உள்ள ஆவணங்களை மாவட்ட குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டும்.

செல்போன் எண்

மேற்படி ஆவணங்கள், முறையாக இருக்கும் பட்சத்தில் மாவட்ட குறைதீர்க்கும் குழுவினரால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் இதர பொருட்களுக்கான விடுவிப்பாணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளரை (கணக்குகள்) செல்போன் எண் 8807823314-க்கு தொடர்பு கொள்ள இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments