அடிப்படை வசதிகளை செய்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க காட்டுப்பட்டி கிராம மக்கள் முடிவு சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு




அடிப்படை வசதிகளை செய்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக காட்டுப்பட்டி கிராம மக்கள் சுவரொட்டி ஒட்டிய தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்

அன்னவாசல் அருகே உள்ள புதூர் ஊராட்சி காட்டுப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த கிராமத்தில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக செய்து தரப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சுவரொட்டியால் பரபரப்பு

இதனால் அதிருப்தி அடைந்த காட்டுப்பட்டி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். மேலும், அடிப்படை வசதிகளை செய்து தராததால் 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், அரசியல் கட்சியினர் யாரும் ஊருக்குள் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்றும் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments