ரம்ஜான் பண்டிகையையொட்டி 4 முதல் 9-ம் வகுப்பு இறுதி தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறிவியல், சமூக அறிவியல் தேர்வு மாற்றம்
பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு முடிந்துவிட்டது. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு (ஏப்ரல் 19-ந் தேதி) அதற்கு முன்னதாக மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.
அதன்படி, சமீபத்தில் ஒரு அட்டவணையையும் வெளியிட்டது. அதில் வருகிற 2-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் அட்டவணை வெளியானது. இந்த நிலையில் அந்த அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதியை மாற்றி அமைக்க எம்.எல்.ஏ.க்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22-ந் தேதிக்கும், 12-ந் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 23-ந் தேதிக்கும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை எப்போது?
ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்த அட்டவணையில் 12-ந் தேதிக்குள் தேர்வை முடித்து 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அட்டவணை மாற்றம் செய்து வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் கோடை விடுமுறை தொடர்பான தகவல் எதுவும் இடம்பெறவில்லை. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘8-ந் தேதிக்கு பிறகு மாணவர்கள் 22 மற்றும் 23-ந் தேதிகளில் நடைபெறும் தேர்வுக்கு வந்தால் மட்டும் போதும். இடைப்பட்ட நாட்களில் தேர்தல் தொடர்பான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட இருப்பதாலும். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற உள்ளதாலும் அது விடுமுறை கணக்கில் வந்துவிடும்' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.