வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு




புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,560 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடி மையங்களும், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 239 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இந்தநிலையில், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள அடப்பன்வயலில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் கோவில்பட்டியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாக்குச்சாவடி மையத்தில் குடிநீர், மின்சாரம், கழிவறை, சாய்தள வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments