அடிப்படை வசதிகள் செய்து தராததால் சின்ன பட்டமங்கலம் கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு பதாகை வைத்ததால் பரபரப்பு




அடிப்படை வசதிகள் செய்து தராததால் சின்ன பட்டமங்கலம் கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்ன பட்டமங்கலம் கிராமம்

ஆவுடையார்கோவில் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சின்ன பட்டமங்கலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தற்போது மிகவும் பழுதடைந்து குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது.

மேலும், இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நல்லிக்குடி, கொத்தமங்கலம் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படித்து வருகிறார்கள். ஆனால் இந்த சாலை மிகவும் பழுதடைந்ததால் பள்ளி மாணவர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய அவலநிலை உள்ளது.

தேர்தலை புறக்கணிக்க முடிவு

மேலும் சின்ன பட்டமங்கலம் கிராமத்திற்கு குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தராததால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து அப்பகுதியில் பதாகை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments