நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக மத்திய துணை ராணுவ படை புதுக்கோட்டைக்கு நாளை வருகை




நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படை நாளை (திங்கட்கிழமை) புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளது.

நாடாளுமன்ற தொகுதிகள்

புதக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியிலும், திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும் அடங்கியுள்ளது.

மாவட்டத்தில் நாலாபுறமும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறலை தடுக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் எல்லைப்பகுதிகளில் உள்ள 8 சோதனைச்சாவடிகள் மற்றும் மாவட்டத்திற்குள் தேர்தலையொட்டி வாகன சோதனைக்காக அமைக்கப்பட்ட 11 சோதனைச்சாவடிகளிலும் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

துணை ராணுவ படை

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்கள் உள்பட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஈடுபடுவது தொடர்பாக பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவ படையினர் 3 கம்பெனிகள் நாளை (திங்கட்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.

அவர்கள் பறக்கும்படையினருடன் வாகன சோதனை, பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments