மக்களவைத் தேர்தல் : 2024 இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் யார் யார் போட்டி?? யார் யாருக்கு எந்த சின்னம்?? மொத்தம் எத்தனை பேர் போட்டி ‌??




இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதால் அத்தொகுதி தமிழகம் முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அவர் சுயேச்சையாக போட்டியிடுவதை பயன்படுத்தி பன்னீர்செல்வம் பெயர் கொண்ட மேலும் 5 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனுக்களும் ஏற்கப்பட்டன.

மொத்தம் 27 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று 2 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் 25 பேருக்கு இடையே போட்டி உறுதியானது. நேற்று மாலை அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கலெக்டர் விஷ்ணுசந்திரன் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிபட்டியல், அவர்களது கட்சி, சின்னங்கள் வருமாறு:-

1. நவாஸ்கனி(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)- ஏணி

2. ஜெயபெருமாள்(அ.தி.மு.க.) - இரட்டை இலை

3. ஓ.பன்னீர்செல்வம்(சுயே-பா.ஜனதா கூட்டணி)- பலாப்பழம்

4. சந்திரபிரபா(நாம் தமிழர் கட்சி) - மைக்

5. ந.சிவானந்தம்(பகுஜன் சமாஜ்) - யானை

6. அபுபக்கர் சித்திக் (சுயே)- கப்பல் சின்னம்

7. ஆர்.கண்ணதாசன் (சுயே)- பேட்டரி டார்ச் லைட்

8. க.சசிகனி(சுயே)-விசில்

9. கா.சதுரகிரி(சுயே)- சிலேடு

10. சலீம்(சுயே)- மோதிரம்

11. சிக்கந்தர்(சுயே)-ஸ்டெம்ப்

12. நா.சிவசங்கர்(சுயே)-டி.வி.

13. செந்தில் மள்ளர்(சுயே)-சைக்கிள் பம்பு

14. ஜி.செல்வராஜ்(சுயே)-காலணி

15. நவாஸ்கான்(சுயே)- புல்லாங்குழல்

16. பஞ்சவர்ணம்(சுயே)-காலிபிளவர்

17. ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் (சுயே)-திராட்சை

18. ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம்-கண்ணாடி தம்ளர்

19. ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம்- கரும்பு விவசாயி

20. ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம்- வாளி

21 மலையாண்டி மகன் பன்னீர்செல்வம்- பட்டாணி

22. செ.பாரிராஜன்- உரலும் குழவியும்

23. ச.மணிவாசகம்- வைரம்

24 முவித்குமார்- ரம்பம்

25. வி.விக்னேஷ்- மின்கம்பம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments