உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹10 லட்சம் அபராதம்!- தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!



உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அண்டை மாநிலங்களில் விற்கப்படும் உணவு பழக்க வழக்கங்கள் தமிழகத்திலும் பரவி வருகிறது.

நைட்ரஜன் பிஸ்கட்

இது போல் சமீபத்தில் டிரெண்டிங் ஆன நைட்ரஜன் பிஸ்கட் எனும் ஸ்மோக் பிஸ்கட் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனதை தொடர்ந்து திருவிழாக்கள், பொருட்காட்சிகள், திருமண விழாக்கள் போன்ற இடங்களில் வைக்கப்படுகிறது. இவ்வாறு இருக்க சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் ஒரு சிறுவன் பொருட்காட்சியில் ஸ்மோக் பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு மயங்கி விழுந்தது போல் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கோரிக்கை

இவ்வாறு இருக்க அதேபோல் தமிழகத்திலும் இது போன்ற பிஸ்கட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்து வந்தது. இதனைத்தொடர்ந்து பலரும் ஸ்மோக் பிஸ்கட்டிற்கு எதிராக கோரிக்கை விடுத்து வந்த வண்ணம் இருந்தனர்.

10 லட்சம் அபராதம்

இவ்வாறு இருக்க உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் அதிரடி உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப்பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்பனை செய்ய கூடாது. இதனையும் மீறி டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

விற்பனை செய்ய கூடாது
இந்த டிரை ஐசை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண்பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் என்றும் உணவுப்பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை விற்பனை செய்ய கூடாது. மேலும் சென்னையில் திரவ நைட்ரஜன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்யவும் தமிழ்நாடு உணவுப்பாதுகாப்பு துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments