திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில் பயணிகள் நலன் கருதி சில ரயில்களின் சேவையை நீட்டித்து அனுமதி வழங்கி ரயில்வே வாரியம் உத்தரவு!







திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில் பயணிகள் நலன் கருதி சில ரயில்களின் சேவையை நீட்டித்து அனுமதி வழங்கி ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் திருச்சி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

ரயில் பயணிகள் நலன் கருதி சில ரயில்களின் சேவையை நீட்டித்து அனுமதி வழங்கி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த ரயில்களின் நீட்டிப்பு மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அமலுக்கு வரும். 

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் நீட்டிப்பு திருவாரூர் 

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ( வ.எண்.06877 ), மே 2 முதல் திருவாரூர் வரை இயக்கப்படும்.

இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 6.25 மணிக்குப் புறப்பட்டு, திருவாரூரை இரவு 10.45 மணிக்கு சென்றடையும். இதுபோல, மே 3-ம் தேதி முதல் திருவாரூரில் இருந்து தினமும் காலை 5.10 மணிக்குப் புறப்படும் திருவாரூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் ( வ.எண்.06690 ) விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு காலை 9.15 மணிக்கு வந்தடையும். இந்த இரு ரயில்களும் பேரளம், பூந்தோட்டம், நன்னிலம் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

சென்னை கடற்கரை-வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நீட்டிப்பு திருவண்ணாமலை 

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ( வ.எண்.06033 ), மே 2-ஆம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை கடற்கரை யில் மாலை 6 மணிக்குப் புறப் படும் இந்த ரயில் வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு இரவு 9.35மணிக்கு வந்து, திருவண்ணா மலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்து சேரும்.
 
இதுபோல, மே 3-ம் தேதி முதல் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் ( வ.எண்.06034 ) காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும். இந்த ரயில்கள் பெண்ணாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதராம்பட்டு, ஆரணிசாலை, மடி மங்கலம், போளூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்சி - விருத்தாச்சலம் நீட்டிப்பு விழுப்புரம் 

திருச்சியில் இருந்து விருத்தாசலம் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ( வ.எண்.06892 ) மே 2-ம் தேதி முதல் விழுப்புரம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் விருத்தாசலத்துக்கு இரவு 9 மணிக்கும், விழுப்புரத்துக்கு இரவு 10.30 மணிக்கும் வந்து சேரும்.

இதுபோன்று விழுப்புரம் - திருச்சி சந்திப்பு பயணிகள் ரயில் ( வ.எண். 06891 ) மே 3-ம் தேதி முதல் விழுப்புரத்தில் இருந்துகாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு, விருத்தாசலத்துக்கு காலை 5.55 மணிக்கும், திருச்சி ரயில் நிலையத்துக்கு காலை 9 மணிக்கும் சென்றடையும். இந்த ரயில்கள் உளுந்தூர்பேட்டை, பரிக்கல், திருவெண்ணெய் நல்லூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சேலம் - விருத்தாச்சலம் ரயில் நீட்டிப்பு கடலூர் துறைமுகம் 
 
சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ( வ.எண். 06122 ) மே 2-ம் தேதி முதல் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் விருத்தாசலத்துக்கு இரவு 9 மணிக்கு வந்து சேரும்.
 
தொடர்ந்து உத்தங்கல்மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி வழியாக கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தை இரவு 10.25 மணிக்கு சென்றடையும். கடலூர் துறைமுகத்தில் இருந்து சேலம் சந்திப்பு ரயில் நிலையம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் ( வ.எண்.06121 ), மே 3-ம் தேதி முதல் கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்குப் புறப்பட்டு, விருத்தாசலத்துக்கு காலை 6.05 மணிக்கு வந்தடையும்.

தொடர்ந்து இந்த ரயில் புறப் பட்டு சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தை காலை 9.05 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருச்சியில் மாலை 6 மணிக்குப் புறப்படும் ரயில் விழுப்புரத்துக்கு இரவு 10.30 மணிக்கு வந்து சேரும்.

திருச்சி - தஞ்சாவூர் ரயில் நீட்டிப்பு திருவாரூர்

மற்றுமொரு ரயில் சேவையும் இதேபோல நீட்டிக்கப்பட்டிருக்கிறது. திருச்சிலிருந்து தஞ்சாவூர் வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் இனி திருவாரூர் வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வண்டி எண் 06876 எனும் பாசஞ்சர் ரயில் தினசரி இரவு 8.28 மணிக்கு திருச்சிலிருந்து புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு தஞ்சாவூர் வரும். இந்த ரயில், மே மாதம் 2ம் தேதியிலிருந்து சலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி வழியாக இரவு 11.5 மணிக்கு திருவாரூர் சென்று சேரும்.

மறுமார்கமாக வண்டி எண் 06871 எனும் பாசஞ்சர் ரயில் மே மாதம் 3ம் தேதி முதல் அதிகாலை 4.45 மணிக்கு திருவாரூரிலிருந்த புறப்பட்டு, காலை 5.45க்கு தஞ்சாவூருக்கும் காலை 7 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்திற்கும் வந்து சேரும்.

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் நீட்டிப்பு திருவாரூர்

அதேபோல திருத்துறைப்பூண்டியிலிருந்து வாரத்திற்கு 5 நாட்கள் அகஸ்தியம்பள்ளிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில், இனி திருவாரூர் வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சேவை மே மாதம் 3ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

மே 3-ஆம் தேதி அகஸ்தியம்பள்ளியில் காலை 5.55-க்கு புறப்பட்டு வேதாரண்யம், தோப்புத்துறை, கரியாப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மணலி, அம்மனூா், திருநெல்லிக்காவல் வழியாக திருவாரூருக்கு காலை 7.55 மணிக்கு வந்தடையும் ரயில், இரவு 7.35 மணிக்கு திருவாரூரிலிருந்து புறப்பட்டு, அகஸ்தியம்பள்ளிக்கு இரவு 9.30-க்கு சென்றடையும்.

இவை அனைத்தும் ரயில் பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பயணிகள் கூறியுள்ளனர்.

செய்தி சுருக்கம் 

* விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு

* சென்னை கடற்கரை - வேலூர் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

* விருத்தாச்சலம் - திருச்சி ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு 

* சேலம் - விருத்தாச்சலம் ரயில் கடலூர் போர்ட் வரை நீட்டிப்பு

* திருச்சி - தஞ்சாவூர் ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு.

* திருத்துறைப்பூண்டி -  அகஸ்தியம்பள்ளி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments