புதுக்கோட்டை மக்களவை தொகுதி மீண்டும் உதயமாகுமா?- 1951 முதல் 2004 வரை வெற்றி பெற்றவர்கள் யார் யார் ? புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இருந்து சட்டமன்ற தொகுதிகள் என்ன என்ன



புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் கொளத்தூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால் தொகுதி மறுசீரமைப்பின்போது புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி இல்லாமல் போனது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, விராலிமலை, அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் ஆலங்குடி,திருமயம் ஆகிய தொகுதிகள்சிவகங்கை மக்களவைத் தொகுதியிலும், விராலிமலை தொகுதி கரூர்மக்களவைத் தொகுதியிலும், அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலும், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியிலும் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகள் இருந்தும் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மறைந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். தொகுதி மறுசீரமைப்பு செய்ததில் இருந்து புதுக்கோட்டை மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்கக் கோரிக்கை வலுத்து வருகிறது.

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி. கொளத்தூர் (தனி), அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.

இங்கு வென்றவர்கள்

1951 - கே.எம். வலதரசு - கிசான் மச்தூர் பிரசா கட்சி

1957 - எப். இராமநாதன் செட்டியார் - காங்கிரசு

1962 - ஆர். உமாநாத் - இந்திய பொதுவுடமை கட்சி

1967 - ஆர். உமாநாத் - இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்)

1971 - கே. வீரய்யா - திமுக

1977 - வி. எசு. இழஞ்செழியன் - அதிமுக

1980 - வி. என். சாமிநாதன் - காங்கிரசு

1984 - என். சுந்தரராசு - காங்கிரசு

1989 - என். சுந்தரராசு - காங்கிரசு

1991 - என். சுந்தரராசு - காங்கிரசு

1996 - என். திருச்சி சிவா - திமுக

1998 - இராசா பரமசிவம் - அதிமுக

1999 - எசு. திருநாவுக்கரசு - எம்சிஆர் அதிமுக

2004 - எசு. இரகுபதி - திமுக

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments