மீன்பிடி தடைக்காலம் அமல்; ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடக்கம்..!




வங்க கடலில் தற்போது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் ஆகும். மேலும், மீனவர்கள் இந்த காலகட்டங்களில் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால், மீன் வளங்கள் குறைந்துவிடும். இதனால், மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரையிலான 61 நாட்கள், கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் விசைப்படகுகள் (Powerboats) மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுதுபார்த்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர்.

மீன்பிடி தடைக்காலம் இருந்தபோதிலும், வள்ளம், பைபர் படகுகள், கட்டுமரம் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் கரையோர பகுதிகளில் மட்டும் மீன்பிடிக்க செல்லலாம். மேலும். இந்த காலகட்டத்தில் உயர் ரக மீன்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும். இதனால் மீன்களின் விலை உயரும் சூழல் ஏற்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments