கோபாலப்பட்டிணத்தில் விறுவிறு வாக்குப்பதிவு மதியம் 2 மணி நிலவரப்படி 46.84% வாக்குப்பதிவு



 


இந்திய மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 2024 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19/04/2022 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் துவங்கி மாலை 6.00 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

முன்னதாக அதிகாரிகள் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குகள் செலுத்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் அவ்வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு பூஜ்ஜிய நிலைக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டுவந்து சீலிடப்பட்டன.

அதனை தொடர்ந்து வாக்கு பதிவு முறையாக தொடங்கப்பட்டது. கோபாலப்பட்டிணத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 

வாக்கு சாவடியில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் கூட்டம் கூடுவதை தடுக்கும் நோக்கில் துணை ராணுவபடையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்கானித்து வருகிறார்கள்.

கோபாலப்பட்டினத்தில் காலை 7 மணி முதலே சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க வருகின்றனர்.வாக்காளர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

ஆண்கள், பெண்கள் தனித் தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகிறார்கள்

கோபாலப்பட்டிணத்தில் 1757 ஆண் வாக்காளர்கள், 1800 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3801 வாக்காளர்க 3557 உள்ளனர்.

கோபாலப்பட்டிணத்தில் காலை 7 மணி முதலே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

பகல் 12 மணிக்கு மேல் வாக்குப்பதிவு திடீரென மந்தமானது. கோடை வெயில் கொழுத்தியதால், வாக்காளர்கள் வீடுகளிலேயே முடங்கினர்

2024 மக்களவை தேர்தலில் கோபாலப்பட்டிணத்தில் பதிவான வாக்கு விபரம் :

கோபாலப்பட்டிணத்தில் மொத்தம் 3557 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1757 பேரும்,பெண்கள் 1800  பேரும் அடங்குவர்.

மதியம் 2 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் 

வார்டு வாரியாக விபரம்:

பாகம் எண் 149

மொத்த வாக்குகள் எண்ணிக்கை: 982

பதிவான வாக்குகள் எண்ணிக்கை:  440

பாகம் எண் 150

மொத்தம் வாக்குகள் எண்ணிக்கை: 789

பதிவான வாக்குகள் எண்ணிக்கை:  375

பாகம் எண் 151

மொத்தம் வாக்குகள் எண்ணிக்கை:   976

பதிவான வாக்குகள் எண்ணிக்கை: 450

பாகம் எண் 152

மொத்தம் வாக்குகள் எண்ணிக்கை: 810

பதிவான வாக்குகள் 
எண்ணிக்கை: 400

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments