புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: 2 ஊராட்சி மக்கள் உண்ணாவிரத போராட்டம்!



புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 ஊராட்சி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை நகராட்சியுடன் அருகே உள்ள 8 ஊராட்சிகளை முழுமையாகவும், 3 ஊராட்சிகளில் பகுதியாகவும் இணைத்து புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு கட்டங்களாக போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
திருக்கட்டளை ஊராட்சி மக்கள் கேப்பரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

இந்த நிலையில் திருமலைராயசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மேட்டுப்பட்டியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் திருக்கட்டளை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கேப்பரையில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டங்களில் 2 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
திருமலைராயசமுத்திரம் ஊராட்சி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘தங்கள் கிராமத்தை நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் அதிகமாகும். 100 நாள் வேலைதிட்டத்தில் வேலை கிடைக்காத நிலை உருவாகும். எனவே எங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்றனர்''.

இந்த போராட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கொளுத்தும் வெயிலில் பந்தல் அமைத்து பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெண்கள் சிலர் விசிறிகளை கையில் வைத்து இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments