கொடைக்கானல் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் பத்திரமாக மீட்ட தீயனைப்பு துறையினர் !




கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர்! 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞரை மீட்டது தீயணைப்புத்துறை. கை, கால்கள் மற்றும் தலையில் சிறு காயங்களுடன் தன்ராஜ் மீட்கப்பட்டுள்ளார்.


கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த தன்ராஜ் என்பவர் டால்ஃபின் நோஸ் பகுதியில் நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று தூத்துகுடியில் இருந்து 6 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். 

அங்கு டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தினை பார்க்கும்போது  100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

இளைஞர் பள்ளத்தில் விழுந்தது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பள்ளத்தில் விழுந்த இளைஞரை 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, சிறு காயங்களுடன் இளைஞரை பத்திரமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

அதனைத்தொடர்ந்து அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வனத்துறை வாகனம் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு இளைஞருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞர் டால்பின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments